பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
தாவூத் இப்ராஹிம் பணமோசடி வழக்கில், அமைச்சர் பரபரப்பு கைது.. அமலாக்கத்துறை அதிரடி.!
மகாராஷ்டிரா மாநிலத்தின் அமைச்சர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக்கை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. இன்று காலை முதலாகவே அவரின் வீடு மற்றும் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையை தொடர்ந்து, பிற்பகலில் அதிகாரிகள் அமைச்சர் நவாப் மாலிக்கை அதிரடியாக கைது செய்தனர். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய தற்போது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
தாவூத் இப்ராஹிம் தொடர்பான பணமோசடி வழக்கு குற்றச்சாட்டில் நவாப் மாலிக் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை அறிந்த அவரின் தொண்டர்கள் அமலாக்கத்துறை அலுவலகம் முன்னர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.