ஒரு பீட்சா ஆர்டர் செய்து, 11 இலட்சத்தை இழந்த மூதாட்டி.. பட்டை நாமம் போட்ட பகீர் சம்பவம்.!



Maharashtra Mumbai Aged Woman Cheated Loss Rs 11 Lakh Online Fraud

ஆன்லைனில் பீட்சா ஆர்டர் செய்த மூதாட்டியிடம் ரூ.11 இலட்சம் ஏமாற்றப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

இணையவழியில் மோசடி செய்து பணம்பறிக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மர்ம கும்பல் தனது அட்டகாசத்தை தொடர்ந்து செய்து வருகிறது. 

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, அந்தேரி பகுதியை சேர்ந்த மூதாட்டி ஆன்லைனில் பீட்சா ஆர்டர் கொடுத்துள்ளார். இதற்கு பணமாக ரூ.9,999 எடுக்கப்பட்ட நிலையில், உளர் பழங்களை ஆர்டர் செய்து ரூ.1,146 ஐ செலுத்தியுள்ளார். 

maharashtra

தனது வங்கிக்கணக்கில் இருந்து அதிகளவு பணம் எடுக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்த பெண்மணி, இணையத்தளத்தில் கொடுக்கப்பட்ட அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய மர்ம நபர், செல்போனில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்ய கூறியுள்ளார். 

மூதாட்டியும் செயலியை பதிவிறக்கம் செய்த நிலையில், அவரின் வங்கிக்கணக்கு மற்றும் ரகசிய குறியீடு எண் போன்றவற்றை பெற்று ரூ.11 இலட்சத்தை திருடி இருக்கிறார். தாமதமாக ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூதாட்டி, மும்பை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.