#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாட்ஸப்பில் நிர்வாண படம்.. 30 வயது பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த 22 வயது துப்புரவு பணியாளர்.!
30 வயது பெண் மருத்துவருக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய 22 வயது துப்புரவு பணியாளர் கைது செய்யப்பட்டார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, முனிசிபல் மருத்துவமனையில் 30 வயதுடைய பெண் மருத்துவர் பணியாற்றி வருகிறார். இதே மருத்துவமனையில் 22 வயதுடைய பிரின்ஸ் ஜெய்ஸ்வால் என்ற இளைஞர் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், அவசர தேவைக்காக மற்றும் அலுவலக உபயோகத்திற்கு என பிரின்ஸ் ஜெய்ஸ்வாலிடம் அலுவலக செல்போன் மற்றும் மருத்துவர்களின் அலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதனை வைத்து ஜெய்ஸ்வால் மருத்துவர்களிடம் பல்வேறு எண்களில் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். இதுகுறித்து கண்டித்தும் அவர் கேட்காமல் இருந்து வந்த நிலையில், சம்பவத்தன்று 30 வயது பெண் மருத்துவரின் வாட்சப் எண்ணிற்கு ஜெய்ஸ்வால் தனது நிர்வாண புகைப்படத்தை அனுப்பியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர், மருத்துவமனை முதல்வருக்கு தகவலை தெரிவிக்கவே ஜெய்ஸ்வாலின் பணி பறிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரின் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் 22 வயதாகும் பிரின்ஸ் ஜெய்ஸ்வாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.