#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நாடே அதிர்ச்சி..! 11 வயது சிறுமி பள்ளிக்கூட கழிவறையில் பாலியல் பலாத்காரம்.. மர்ம நபர் துணிகர செயல்.. கண்ணீரில் பெற்றோர்.!
பள்ளி வளாகத்தில் வைத்து 11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, சிவாஜி நகர் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் பயின்று வருகிறார்கள். இதே பள்ளியில், 11 வயதுடைய சிறுமி 6 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று சிறுமி வகுப்பறையில் இருந்து கழிவறைக்கு சென்றபோது, சிறுமியுடன் பேச்சுக்கொடுத்து வந்த மர்ம நபர், சிறுமி எதிர்பாராத வேளையில் அவரை கழிவறைக்குள் தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி அங்கிருந்து வந்து தனது தோழிகளிடம் தகவலை தெரிவிக்க, அவர்கள் ஆசிரியர்களிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து, பள்ளி நிர்வாகத்தினர் சிறுமியின் பெற்றோருக்கும், சிவாஜிநகர் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சிறுமியிடம் விசாரணை செய்து புகார் பதிவு செய்துகொண்டுள்ளனர். சிறுமியை பலாத்காரம் செய்த மர்ம நபரை அதிகாரிகள் தேடி வருகிறார்கள். மேலும், பள்ளி வளாகத்தில் உள்ள சி.சி.டி.வி கேமிரா காட்சியையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.