ஸ்னாப்சாட் பழக்கம்; பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த 20 வயது இளைஞர்..! புதிய நட்பால் பதறவைக்கும் செயல்.!



maharashtra Mumbai Snapchat Friend Rapes Minor Girl 


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையை சேர்ந்த 15 வயது சிறுமி ஸ்னாப்சாட் செயலி உபயோகம் செய்து வந்துள்ளார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞரின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. 

இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 13ம் தேதி இளைஞர் சிறுமியை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். சிறுமியும் இளைஞர் கூறிய இடத்திற்கு சென்றுள்ளார். 

அங்கிருந்து சிறுமியை தனது உறவினரின் வீட்டிற்கு அழைத்துச்சென்ற நபர், வீட்டை பூட்டி வலுக்கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டிற்கு திரும்பியதும் தனக்கு நடந்த துயரத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைக்கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் உண்மை அம்பலமாகவே, 20 வயது இளைஞரை அதிகாரிகள் கைது செய்தனர்.