#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
4 நாட்கள் திருவிழாவில் அதிர்ச்சி: ரூ.30 இலட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை..!
தலைப்புப்படம்: தங்க நகை மாதிரி படம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக்கில் கடந்த நவம்பர் 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெற்ற மதவழிபாடு நிகழ்ச்சியை பயன்படுத்தி, கொள்ளையர்கள் பக்தர்களின் ரூ.30 இலட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த சம்பவம் நடந்துள்ளது.
இதுதொடர்பாக 40 புகார்கள் தற்போது வரை பெறப்பட்டுள்ளதாக இந்திரா நகர் காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள், தொடர் விசாரணையை முன்னெடுத்து இருக்கின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மொத்தமாக 14 ஸ்மார்ட்போன்களும் திருடப்பட்டுள்ளன. அவர்களது செல்போனின் ஐஎம்இஐ நம்பர் கொண்டு, ஸ்மார்ட்போன்களை கண்டறியும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பண்டிகைக்காலத்தினை குறிவைத்து மக்களிடம் பெரிய அளவிலான திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.