பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ஓடும் பேருந்தில் உறங்கிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடத்துனர்: போக்ஸோவில் வழக்குப்பதிந்த காவல்துறை.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே, தபோலி பகுதியில் இருந்து நவி மும்பை நோக்கி பயணம் செய்த மகாராஷ்டிரா மாநில அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்து, கடந்த நவம்பர் 26ம் தேதி இரவில் மும்பை நோக்கி புறப்பட்டுள்ளது.
இந்த பேருந்தில் 17 வயதுடைய சிறுமி பயணம் செய்துள்ளார். பேருந்தின் நடத்துனராக சந்தோஷ் வடேகர் (வயது 48) என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவர் சிறுமி உறக்கத்தில் இருந்தபோது, அவரை பாலியல் ரீதியாக நெருங்கி இருக்கிறார்.
அதிர்ந்துபோன சிறுமி விழித்து கண்டித்ததையடுத்து, நடத்துனர் அங்கிருந்து சென்றுள்ளார். நவம்பர் 27ம் தேதி சிறுமி மும்பை வந்துவிட்ட நிலையில், தனக்கு நேர்ந்ததை எண்ணி தினமும் வருத்தப்பட்டு வந்துள்ளார்.
இதனையடுத்து, நேற்று நவி மும்பை காவல் நிலையத்தில் அவர் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் நடத்துனர் சந்தோஷுக்கு எதிராக போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.