#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஓடும் காரில் கைக்குழந்தையுடன் பயணித்த பெண்ணுக்கு நடந்த பயங்கரம்.. பலாத்கார முயற்சி, பெண் சிசு சாலையில் தூக்கி வீசி கொலை.!
தனது கைக்குழந்தையோடு பயணம் செய்த பெண்ணை 3 பேர் கும்பல் பலாத்காரம் செய்ய முயற்சித்து, பச்சிளம் சிசுவை கொன்று தாயை கவலைக்கிடமான நிலைக்கு தள்ளிய பயங்கரம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாலகர் மாவட்டம், வாடா டெக்சில் பகுதியில், பெல்ஹாரில் இருந்து பொஷேரே நோக்கி, நேற்று (டிச, 10) டாக்சி பயணம் செய்துகொண்டு இருந்தது, டாக்சியை விஜய் குஷ்வாகா என்பவர் இயக்கியுள்ளார். காரில் கைக்குழந்தையுடன் இளம்பெண் மற்றும் 2 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
இந்நிலையில், டாக்சி மும்பை - அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்தபோது, டாக்சியின் ஓட்டுனர் மற்றும் பயணிகள் உட்பட 3 பேர் சேர்ந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளனர். அதற்கு இடையூறாக இருந்த 10 மாதமான பெண் பச்சிளம் குழந்தையை தூக்கி வெளியே வீசியுள்ளனர்.
இதனால் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலவந்ததிற்கு ஒத்துழைக்காத பெண்ணையும் தூக்கி சாலையில் வீசி இருக்கின்றனர். அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் தாய் - சேயை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மருத்துவமனையில் குழந்தையின் இறப்பு உறுதி செய்யப்பட, தாய் சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்த மாண்டவி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள விஜய் குஷ்வாஹா உட்பட அவரின் கூட்டாளிகளுக்கு வலைவீசப்பட்டுள்ளது.