#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஸ்பா பெயரில் சிறுமிகளை பாலியல் அடிமையாக விற்பனை செய்யும் கும்பல்.. 3 பெண்கள் மீட்பு..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவி மும்பை பகுதியில் உள்ள ஸ்பாவில், சிறுமிகள் மற்றும் பெண்கள் பாலியல் அடிமையாக விற்பனை செய்யும் கும்பல் செயல்பட்டு வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ஸ்பாவில் அதிரடி சோதனை நடத்தினர்.
சோதனையின்போது, ஸ்பாவின் உரிமையாளரான மனிதனு அத்காரே (வயது 30) என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும், 3 பெண்கள் மீட்கப்பட்டனர். இவர்களில் மனிதனு அத்காரே நேபாள நாட்டை சேர்ந்தவர் ஆவார். மும்பை கர்காரி பகுதியில் பிரியா ரெசிடென்சியில் வசித்து வருகிறார். கைதானவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
இதனைப்போல, இவர்களின் கூட்டாளிகள் ஜின்னத் ஷேக், பூஜா படேல், ரவி சிவசரன், சந்திர பாபு ஆகியோரை அதிகாரிகள் தேடி வருகின்றனர். இவர் ஸ்பா அறைக்குள் வரும் வாடிக்கையாளரை கவர, பல்வேறு யுக்திகளை உபயோகித்து, அதன் மூலமாக சிறுமிகள் பாலியல் அடிமையாக விற்பனை செய்யும் செயலையும் செய்து வந்துள்ளனர்.
சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் பாலியல் அடிமையாக விற்பனை செய்யப்படுவது ஆங்கிலத்தில் Flesh Trade என்றும் கூறப்படுகிறது. இதற்கு தமிழில் சதை விற்பனை என்றும் பொருள். புரியும் படியாக சொல்ல வேண்டும் என்றால், இந்த கும்பல் மூலமாக விற்பனை செய்யப்படும் பெண்ணோ சிறுமியோ வாங்குபவர்களுக்கு பாலியல் அடிமையாக இருப்பார்கள் என்பதே பொருள்.
இந்த சட்டவிரோத செயல் முந்தைய காலங்களில் அதிகளவில் நடந்து வந்த நிலையில், காவல் துறையினரின் அதிரடி செயலால் குறைந்து வந்தது. ஆனால், மீண்டும் இந்த சர்ச்சை சம்பவம் நடப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கும்பலை கைது செய்த காவல் துறையினர் போலியான வாடிக்கையாளரை உபயோகம் செய்தது, கும்பலை கைது செய்ய பேருதவி செய்துள்ளது.