பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
மஹாராஷ்டிராவில் அமைச்சருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது எப்படி? வெளியான நீண்ட பட்டியல்!
மஹாராஷ்டிரா வீட்டுவசதி வாரிய அமைச்சராக இருப்பவர் ஜித்தேந்திர அவ்ஹத். இவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது நேற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.
முதலில் அமைச்சரின் தொகுதிக்குட்பட்ட மும்ப்ரா பகுதியை சேர்ந்த காவல் ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் மும்ப்ரா பகுதியில் இருந்த 21 வெளிநாட்டு தப்லி ஜமாத் உறுப்பினர்களை கண்டறிந்த வழக்கில் பணியாற்றியவர்.
அமைச்சர் ஜித்தேந்தர் காவல் ஆய்வாளருடன் ஏப்ரல் மாத துவக்கத்தில் ஊரடங்கினை செயல்படுத்துவது குறித்து நேரில் ஆலோசனை நடத்தியுள்ளார். பின்னர் காவல் ஆய்வாளருக்கு கொரோனா இருப்பது தெரிந்ததும் அமைச்சர் ஏப்ரல் 13 ஆம் தேதி கொரோனா பரிசோதனை செய்துள்ளார். ஆனால் அப்போது அவருக்கு நெகட்டிவ்வாக முடிவு வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களுடன் அமைச்சர் தனிமையில் இருந்தார். ஆனால் அவரது வீட்டில் பணிபுரியும் 5 ஊழியர்களுக்கு தற்போது கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதியாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து 54 வயதான அமைச்சர் தானேயில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்காக சென்றுள்ளார. அப்போது அவரிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளின் முடிவுகள் நேற்று வெளியாகின. அதில் அமைச்சருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
மேலும் மும்ப்ரா காவல் ஆய்வாளரை சந்தித்த பத்திரிக்கையாளர்கள் காவலர்கள் என 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதே போல் அமைச்சர் ஜித்தேந்தரை சமீபத்தில் சந்தித்த தானே பகுதியின் தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஆனந்த் பரன்ஜாபேவிற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சம் நிலவி வருகிறது.