#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
துர்கா பூஜையில் பழங்குடி மக்களுடன் நடனமாடிய முதல்வர் மம்தா பானர்ஜி.! வைரலாகும் வீடியோ!!
கொல்கத்தாவில் நடைபெற்ற துர்கா பூஜையில் கலந்து கொண்டு முதல்வர் மம்தா பானர்ஜி பழங்குடி இன மக்களுடன் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நவராத்திரி விழாவை முன்னிட்டு வடமாநிலங்களில் துர்கா பூஜை மிகவும் விமரிசையாக நடைபெறும். மேலும் அங்கு பூஜைக்குப் பிறகு துர்க்கை சிலைகளை நீரில் கரைக்கும் நிகழ்வுகளும் நடைபெறும். அவ்வாறு அண்மையில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மிகவும் கோலாகலமாக துர்கா பூஜை நடைபெற்றுள்ளது.
அந்த விழாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டுள்ளார். பூஜைகளில் கலந்துகொண்டு தரிசனம் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து அங்கு பழங்குடியினர் மக்களுடன் இணைந்து நடனம் ஆடியுள்ளார்.
முதல்வர் மம்தா பழங்குடி இன மக்களுடன் இணைந்து தாளத்திற்கு ஏற்ப நடனமாடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.