#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
30 ஆண்டுகள் பெண்ணாக வாழ்ந்து வந்த ஆண்.! மருத்துவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
கொல்கத்தாவில் கடந்த 30 வருடங்களாக எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து வந்த பெண்ணிற்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பெண் இல்லை ஆண் என்பதை கண்டறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேற்கு வங்கத்தின் பிர்பூம் பகுதியைச் சேர்ந்தவ 30 வயது பெண்ணுக்கு திருமணம் ஆகி ஒன்பது ஆண்டுகள் ஆகிறது. இவருக்கு சமீபத்தில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால், கொல்கத்தாவில் இருக்கும், புற்றுநோய் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், தோற்றத்தில் பெண்ணாக இருக்கும் இவரது குரல், உடலுறுப்புகள் அனைத்தும் பெண்களுக்கு இருப்பது போன்றே அமைந்திருக்கும். ஆனால் இவருக்கு பிறந்ததிலிருந்து மாதவிடாய் வருவதில்லை. கருபப்பையும் கிடையாது. சிகிச்சை எடுக்க வந்த அவருக்கு நாங்கள் பரிசோதனைகளை மேற்கொண்டப்போது அவரது உடலில் விந்தனுக்கள் வளர்ச்சி அடையாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தோம். இதன் காரணமாகவே அவரது ஹார்மோன்கள் அவருக்கு பெண் தோற்றத்தை கொடுத்துள்ளது என தெரிவித்தனர்.
மேலும், அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் புற்றுநோய் இருப்பதும் தெரியவந்துள்ளது. தற்போது, அவருக்கு கீமோ தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அவரது உடல்நிலையும் சீராக உள்ளதாக தெரிவித்தார். சிகிச்சைக்கு வந்த நபர் இது குறித்து அறிந்த போது அவர் எவ்வாறு எடுத்துக் கொண்டார் என செய்தியாளர்கள் கேட்டபோது அதற்கு பதில் அளித்த மருத்துவர்கள். அவர் பெண்ணாகவே வளர்ந்துள்ளார். கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் ஆண் ஒருவருடன் திருமணம் முடிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
அவர்களது வாழ்க்கையை தொடர்வது குறித்து மன நல ஆலோசனை வழங்கப்படும். இரண்டு முறை கருத்தரிக்க முயற்சித்த போதும் தோல்வியடைந்துள்ளனர். அவரது உறவினர்கள் இருவருக்கு இந்த பிரச்சனை இருந்தது தெரிய வந்துள்ளது. 22 ஆயிரம் பேரில் ஒருவருக்கு வரக்கூடிய நோய் இது இவரைத் தொடர்ந்து இவரது சகோதரிக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவரும் ஆண் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.