ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்காக மகளின் திருமண விருந்தை நிறுத்திய வைர வியாபாரி!



Man stopped daughter marriage and donated

கடந்த வியாழக்கிழமை இரவில் காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலை இந்தியர்கள் யாரும் மறந்துவிட முடியாது. இந்த தற்கொலை படை தாக்குதலில் 44 இராணுவ வீரர்கள் நேரத்தில் கொல்லப்பட்டனர்.

விடுமுறை முடிந்து நாட்டைக் காக்க சென்ற வீரர்கள் மீண்டும் பிணமாகத்தான் வீடு திரும்பினர். இவர்களை இழந்த பெற்றோர், குழந்தைகள், மனைவி மற்றும் உறவினர்கள் ஆழ்ந்த சோகத்தில் உறைந்துள்ளனர்.

Kashmir att

இவர்களின் சோகத்தை வெறும் வார்த்தைகளால் நீக்கிவிட முடியாது. கண்டிப்பாக அந்த வீரர்களை உயிரோடும் மீட்டெடுக்கவும் முடியாது. ஆனால் நம்மால் இயன்ற சிறு உதவிகளை அவர்களின் குடும்பத்தின் எதிர்காலத் தேவைகளுக்காக கொடுக்க முடியும்.

அப்படி ஒரு எண்ணத்தில்தான் சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி தேவாசி மானேக் என்பவர் தனது மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த ரூபாய் 11 லட்சம் பணத்தை தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நன்கொடையாக உள்ளார் அளித்துள்ளார். ஆடம்பரமாக நடைபெற இருந்த திருமணவிருந்து மிகவும் எளிமையாக நேற்று நடந்து முடிந்தது.