கொரோனா பீதியிலும் என்னவொரு ரணகளம்! தங்கமாஸ்க்குடன் வலம்வரும் நபர்! அதன் விலை எவ்வளவு தெரியுமா?



man-wear-2lakhs-value-goldmask-in-maharashtra

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அதிதீவிரமாக பரவி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவிய நிலையில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும் நாளுக்கு நாள் பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும். அடிக்கடி கை கழுவ வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாஸ்க் அணிவது கட்டாயம் என்ற நிலையில் சிலர் விதவிதமாக டிசைன் செய்யப்பட்ட, தாங்கள் அணியும் ஆடைகளுக்கு மேட்சாக மாஸ்க்குகளை அணிந்து வருகின்றனர். இந்நிலையில் அனைத்தையும் மிஞ்சி மகாராஷ்ட்ராவில், நபர் ஒருவர் தங்கத்திலான மாஸ்க் தயாரித்து  அணிந்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

புனேவில் பிம்ப்ரி சிஞ்ச்வாட் பகுதியை சேர்ந்த ஷங்கர் குரேட் என்பவர் 2.89 லட்சம் மதிப்புள்ள தங்கமாஸ்க் உருவாக்கி அதனை அணிந்து வலம்வருகிறார்.  அந்த மாஸ்க்கில் சுவாசிப்பதற்கு சிறிய துளைகள் இருந்துள்ளது. மேலும் இதுகுறித்து பேட்டி ஒன்றில் ஷங்கர் குரேட் கூறுகையில், இந்த தங்க மாஸ்க் கொரோனாவிலிருந்து எந்த அளவிற்கு பாதுகாக்கும் என தெரியவில்லை. ஆனால் அதில் சிறிய துளைகள் இருப்பதால் சுவாசிப்பதற்கு எந்த பாதிப்பும் இல்லை எனக் கூறியுள்ளார்.