#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
Marion Biotech: உற்பத்தியை நிறுத்தியது மேரியன் மருந்து நிறுவனம்.. Doc1Max சிரப் குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்ததால் முடிவு.!
18 குழந்தைகளை காவு வாங்கிய மருந்து நிறுவனம் தனது உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்தது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டாவில் செயல்பட்டு வரும் Marion Biotech மருந்து நிறுவனம், உஸ்பெகிஸ்தான் உட்பட பல நாடுகளுக்கு Doc1Max இருமல் சிரப்களை தயாரித்து அனுப்பி வைத்தது.
இந்த மருந்தை குடித்த 19 உஸ்பெகிஸ்தான் நாட்டு சிறார்கள் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. உலக சுகாதார அமைப்பும் தனது குழுவை உஸ்பெகிஸ்தான் நாட்டுக்கு அனுப்பி வைத்தது.
இந்த நிலையில், நொய்டாவில் செயல்பட்டு வரும் Marion Biotech நிறுவனம் தனது மருந்து உற்பத்திகளை நிறுத்துவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.