#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
2 வாரத்திற்கு முன் காணாமல்போன பெண்.. நதிக்கரையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பகீர் சம்பவம்..! நடந்தது என்ன?.!
காணாமல் போன பெண்மணி நதிக்கரையில் புதைக்கப்பட்ட பகீர் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரதாப்கர் மாவட்டத்தில் திருமணமான பெண் காணாமல் போனதாக கடந்த 2 வாரத்துக்கு முன்னதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்திவந்த நேரத்தில், அப்பகுதியில் பெண் புதைக்கப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது.
இதன்பின் காவல்துறையினர் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தப்பட்டது. பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய வட்ட அதிகாரி அபய் பாண்டே, "கோட்வாலி கன்ஷிராம் காலனி பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் கடந்த ஜூலை 12ஆம் தேதி காணாமல் போய் உள்ளார்.
அவரின் உடல் ஆற்றங்கரை அருகே புதைக்கப்பட்ட நிலையில், கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்மணியின் கணவர் உட்பட பலரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடக்கிறது" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.