#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தமிழர்களுக்கு பெருமிதம்! தாய்லாந்து மொழியில் திருக்குறளை வெளியிட்ட பிரதமர் மோடி
மூன்று நாள் அரசுமுறை பயணமாக தாயலாந்திற்கு சென்றுள்ள கந்திய பிரதமர் நரேந்திர மோடி பாங்காங்கில் நடைபெற்ற விழாவில் தாய்லாந்தில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளின் முதல் பதிப்பை வெளியிட்டார்.
திருவள்ளுவரால் தமிழ் மொழியில் எழுதப்பட்ட திருக்குறள் உலகம் முழுவதும் தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்து வருகிறது. பல நாட்டினர் திருக்குறளை தங்கள் தாய் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர்.
இதற்கு காரணம் சாதி மத பாகுபாடின்றி உலகில் வாழும் அத்தனை மனிதர்களுக்கும் வாழிக்கு நெறிகளை சுருக்கமாக எடுத்துரைக்கும் சிறப்பம்சம் திருக்குறளுக்கு இருப்பதால் தான். திருக்குறளின் சிறப்பம்சத்தை தமிழர்களாகிய நாம் நிச்சயம் உலகெங்கும் பறைசாற்ற வேண்டும்.
இதனையே கருத்தில் கொண்டு தாய்லாந்து வாழ் தமிழ் சமூகத்தினரால் திருக்குறள் தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்படுள்ளது. அதன் முதல் பதிப்பை பிரதமர் மோடி இன்று தாய்லாந்தில் அறிமுகம் செய்தார்.