#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
டெல்லியில் வெடித்த வன்முறை! முதன்முதலாக மௌனம் கலைத்து பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோள்!
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் ஷாகின் பாக் பகுதியில் முஸ்லிம் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதற்கு அப்பகுதியில் உள்ள மற்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் அந்த போராட்டம் பெரும் கலவரமாக மாறி, கலவரக்காரர்கள் வீடுகள், கடைகள் மற்றும் பொது சொத்துக்களை அடித்து உடைத்து தீ வைத்தனர். வடகிழக்கு டெல்லி முழுவதும் போர்க்களமாக மாறியுள்ளது. மேலும் டெல்லியில் முக்கிய பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எல்லையில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. மேலும் வன்முறையில் காயமடைந்து 190 க்கும் அதிகமானோர் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர். பல்வேறு பகுதிகளில் துணை ராணுவ படையினர், டெல்லி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கலவரக்காரர்களை தடியடி நடத்தி கலைத்தனர். ஆனாலும் கலவரம் அடங்கவில்லை. இந்நிலையில் கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் சில இடங்களில் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள்.மேலும் கலவரத்தை ஒடுக்க மத்திய அரசு கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் தற்போது பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், அமைதியும் நல்லிணக்கமும் நமது பண்பாடின் நெறிமுறைகளில் முக்கியமானவை. டெல்லியில் உள்ள எனது சகோதர சகோதரிகளுக்கு எல்லா நேரங்களிலும் அமைதியையும் சகோதரத்துவத்தையும் பேணுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன். இந்தச் சூழலிில் அமைதி காப்பது முக்கியமாகும். அப்போதுதான் இயல்புநிலையை விரைவில் மீட்டெடுக்க முடியும் என்று பதிவிட்டுள்ளார்.