#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குழந்தையை கொன்று தாய் எடுத்த விபரீத முடிவு.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
கேரளாவில் 5 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் டீனு இவருக்கு திருமணமாகி 5 மாத குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு டீனு தனது குழந்தையை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டில் எதுவும் சத்தம் கேட்காததால், வீட்டின் அருகே உள்ள அவரது உறவினர்கள் கதவை தட்டியுள்ளனர்.
அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததால், அவரது வீட்டுக்குள் சென்று பார்த்தபோது டீனு தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் குழந்தை இருந்து கிடந்ததையும் கண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த டீனு மற்றும் அவரது 5 மாத குழந்தையின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது 4 மாதங்களுக்கு முன்பு டீனுவின் கணவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட டீனு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.