#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கணவருடன் குடும்பத்தகராறு; 2 குழந்தைகளை விஷம்கொடுத்து கொன்று, தாய் தானும் தற்கொலை.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, நாசிக் பகுதியை சேர்ந்த பெண்மணி அஸ்வினி (30). இவர் கணவர் ஸ்வப்னிலுடன் வசித்து வருகிறார். தம்பதிகளுக்கு ஆராதயா (8), அகஸ்தியா (2) என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
கணவன் - மனைவி சண்டை:
தம்பதிகளுக்கு இடையே அவ்வப்போது குடும்பத்தகராறு நடந்து வந்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று விரக்தியில் இருந்த பெண்மணி, தனது கணவர் வெளியே சென்றபின் குழந்தைகளுக்கு விஷம் கலந்த உணவை கொடுத்துள்ளார்.
குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை:
அதனை குடித்த குழந்தைகள் இறந்துவிட, பெண்மணியும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதிய கடிதத்தில் கணவரின் தொல்லை காரணமாக குழந்தைகளை கொலை செய்து தான் தற்கொலை செய்வதாகவும் கூறி இருக்கிறார்.
இதனால் காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.