பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!
யார்கிட்டடி பேசிட்டு இருக்க? நடுரோட்டில் ஓங்கி அறைந்த ஆண் நண்பர்! சுருண்டு விழுந்து பலியான பெண்!
ஆண் நண்பர் ஒரு அறைந்த ஒரே அறையில் பெண் ஒருவர் இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் சீதா. வயது 34. இவர் மும்பையில் உள்ள மான்கர்ட் ரயில்நிலையத்தில் நின்றவாறு யாருடனோ தொலைபேசியில் பேசியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த சீதாவின் ஆண் தோழர் ராஜீ புஜாரி எல்லப்பா என்பவர் சீதாவிடம் கோவமாக வந்து யார்கிட்டடி போன்ல பேசுற என ஓங்கி ஒரு அறை விட்டுள்ளார். இதில் நிலை குலைந்து கீழே விழுந்த சீதா மயங்கியுள்ளார். உடனே அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர்.
ஆனால், சீதா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ராஜு அறைந்ததில் சீதா கீழே விழுந்தபோது அவரது தலையில் அடிபட்டு இறந்திருக்கக்கூடும் என கூறப்படுகிறது. எனினும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்தே பிறகே சீதா எப்படி இறந்த என தெரியும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், ராஜூவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.