வேற்று சமூகத்தை சேர்ந்த இளைஞனை காதலித்த மகள்! ஆத்திரத்தில் ஒட்டு மொத்த குடும்பத்தையும் அடித்து கொடூர கொலை செய்த தந்தையின் வெறிச்செயல்!



Murder

தனது மகள் வேற்று சாதி இளைஞனை காதலித்து வந்ததால் அவமானம் தாங்க முடியாமல் ஒட்டு மொத்த குடும்பத்தையும் சுத்தியலால் அடித்து கொடூர கொலை செய்த தந்தையின் வெறிச்செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் பிரிஜேஷ் திவாரி. இவர் சிறப்பு பிரிவில் போலீஸ் கான்ஸ்டபிளாக பணிப்புரிந்து வந்துள்ளார். இவருக்கு குஷ்பூ என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

Murder

திவாரியின் மகள் குஷ்பூ வேற்று சாதி இளைஞனை காதலித்து வந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த திவாரி அடிக்கடி குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ள அனைவரிடமும் சண்டையிட்டு வந்துள்ளார்.

ஒரு நாள் திவாரி வேலை முடித்து வீடு திரும்பும் போது நன்கு குடித்து விட்டு வந்துள்ளார். வந்ததும் அவர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும் சண்டையிட்டுள்ளார். மேலும் ஆத்திரத்தில் சுத்தியலால் குடும்பத்தில் உள்ள அனைவரையும் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.