பக்காவான மாஸ்டர் பிளான்... கணவரை தீர்த்து கட்டிய மனைவி... திருமணமான ஒரே மாதத்தில் நடந்த கொடூரம்.!



newly-married-wife-murdeered-her-busband-and-creates-a

திருமணமான ஒரே மாதத்தில் தனக்கு பிடிக்காத கணவரை திட்டம் போட்டு தீர்த்துக் கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வழக்கில் நாடகம் ஆடிய  மனைவியை கைது செய்துள்ளது காவல்துறை.

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தைச் சார்ந்தவர்  சுராஜ் ராஜேந்திரா இவர் டேட்டா ஆப்பரேட்டராக பணியாற்றி வந்தார். இவருக்கும் அங்கீதா என்ற பெண்ணுக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பெற்றோர்கள் இந்த திருமணத்தை நடத்தி வைத்தனர். இதனைத் தொடர்ந்து கணவன் மனைவி இருவரும் மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள  புனித தளங்களுக்கு சென்று வந்தனர். இதன் ஒரு பகுதியாக புறநகர் பகுதியில் இருக்கும்  பிரசித்தி பெற்ற ஒரு ஆலயத்திற்கு சென்று இருக்கின்றனர். அப்போது பக்கத்தில்தான் நமக்கு சொந்தமான தோட்டம் ஒன்று இருக்கிறது அங்கு சென்று விட்டு வீடு திரும்பலாம் என கூறி இருக்கிறார் மனைவி அங்கீதா. இதற்கு சுராஜ் சம்மதித்திருக்கிறார்.

maharastra

இந்நிலையில் தனது தந்தைக்கு போன் செய்த அங்கீதா தோட்டத்து வீட்டில் இருக்கும் போது முகமூடி கொள்ளையர்கள் வந்து தங்களை தாக்கியதாகவும் தனது கணவர் சூரஜை கொலை செய்ததாகவும் பதற்றத்துடன் கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தை காவல்துறைக்கு புகார் கொடுத்துள்ளார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று  கத்தி குத்து காயங்களுடன் இறந்து கிடந்த சூரஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து  இது தொடர்பாக விசாரணை செய்து வந்தனர்.

அப்போது அவரது மனைவி அங்கீதாவிடம் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று தங்கள் பாணியில் விசாரித்ததில் தன் கணவரை தனக்கு பிடிக்கவில்லை என்றும்  மேலும் தன் மீது எப்போதும் சந்தேகத்துடன் அவர் இருந்ததால் தீர்த்து கட்டியதாகவும் உண்மையை  காவல்துறையிடம் ஒப்புக்கொண்டு உள்ளார். திருமணமான ஒரே மாதத்தில் மனைவி கணவனை திட்டம் தீட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.