#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கைலாசாவிற்கு வரவேண்டுமா? அப்போ ஒரு முக்கியமான கண்டிஷன்! சீமானுக்கு பதிலடி கொடுத்த நித்யானந்தா!
கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளிலும் பெரும் போராட்டம் வெடித்துள்ளது.மேலும் டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய போராட்டத்தில் ஈடுபட்டநிலையில் போலீசார்கள் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் பெரும் வன்முறை வெடித்தது.
மேலும் டெல்லியில் மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் தொடர்கிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியும் சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டது.
அப்பொழுது அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில் , எனக்கு குடியுரிமை இல்லை என்றால் ஒன்றும் பிரச்சனை இல்லை. கைலாசான்னு ஒரு நாடு உருவாகியுள்ளது, அதிபர் நித்யானந்தாவும், அவரது கைலாசா நாடும் உள்ளது. அங்கு சென்றுவிடுவோம் என நக்கலாக கூறியுள்ளார்.
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நித்யானந்தாவின் பிரதமர் அலுவலகத்தின் டுவிட்டர் பக்கத்தில் ஸ்ரீ கைலாஷ் ஒன்றும் திறந்த மடம் அல்ல தமிழ் பிரிவினைவாதிகளை அனுமதிக்க. அரசியல் துறந்து திருவண்ணாமலை கோவிலில் தீபம் ஏற்றி, அன்னை மீனாட்சியின் பாதம் வணங்கினால் சீமானுக்கு குடியுரிமை வழங்க தயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ கைலாஷ் ஒன்றும் திறந்த மடம் அல்ல தமிழ் பிரிவினைவாதிகளை அனுமதிக்க. அரசியல் துறந்து திருவண்ணாமலை கோவிலில் தீபம் ஏற்றி, அன்னை மீனாட்சியின் பாதம் வணங்கினால் சீமானுக்கு குடியுரிமை வழங்க தயார்!!!.
— PMO Kailaash (@SriKailashPmo) December 18, 2019
- பிரதமர் அலுவலகம், ஸ்ரீ கைலாஷ்.