#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நித்யானந்தா இங்குதான் பதுங்கியுள்ளாரா? உளவுத்துறை வெளிட்ட புதிய அதிர்ச்சி தகவல்!
கடத்தல் மற்றும் கற்பழிப்பு என பல சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் சுவாமி நித்யானந்தா.இவர்மீது ஏராளமான வழக்குகள் உள்ள நிலையில் அவர் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார். அதனை தொடர்ந்து நித்யானந்தா, தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில் நித்யானந்தா நேபாளம் வழியாக வெளிநாடு தப்பி சென்றுவிட்டதாகவும், ஈக்வடாரில் புதிய தீவு ஒன்றை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசம் என பெயர் வைத்து, அதனை தனிநாடாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியது. மேலும் இந்து மதத்தைப் பின்பற்றும் அனைவரும் கைலாசா நாட்டின் குடிமகனாக ஆகலாம் எனவும் நித்யானந்தா அறிவித்திருந்தார்.
இந்நிலையில் நித்யானந்தா இமயமலை சாரலில் பதுங்கி இருப்பதாகவும், அவரது நடவடிக்கைகளை உளவு அமைப்புகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இமயமலை பகுதியிலிருந்து பேசிய நித்யானந்தாவின் வீடியோக்கள் அவரது பிடதி ஆசிரமத்தில் இருந்து பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தநிலையில் அவரை விசாரணைக்கு உட்படுத்த போலீசார் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.