"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
மத்திய அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு உறுதி! அதிர்ச்சியில் பாஜக தொண்டர்கள்!
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் உலக அளவில் 2-வது நாடாக இந்தியா நீடித்து வருகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 97,894 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஆரம்பத்திலிருந்து அரசு ஊழியர்கள், சுகாதாரப்பணியாளர்கள், தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் ,என பல்வேறு தரப்பில் களத்தில் இறங்கி உதவி செய்து வருகின்றனர். களத்தில் பணியாற்றும் நபர்களுக்கு கொரோனா உறுதியாகி வந்தது.
Yesterday, I was feeling weak and consulted my Doctor. During the course of my check up, I have been tested COVID 19 positive. I am at present doing well with the blessings and good wishes of all. I have isolated myself.
— Nitin Gadkari (@nitin_gadkari) September 16, 2020
கொரோனா தொற்றால் சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய, மாநில அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், " நேற்று எனக்கு உடல் சோர்வு இருப்பதாக உணர்ந்தேன். பின்னர் மருத்துவரை சந்தித்து கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது, எனக்கு கொரோன தொற்று உறுதியானதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது நான் நலமாக உள்ளேன். என்னை நானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன்." என தெரிவித்துள்ளார்