இனி ஸ்கூல் பேக்கும் தேவை இல்லை, வீட்டுப்பாடமும் கிடையாது! பெற்றோர்கள் மகிழ்ச்சி!



No home work, no school bag

குஜராத்தில் உள்ள ஒரு பள்ளியில் தொடக்க கல்வி பயிலும் மாணவர்கள் ஸ்கூல் பேக் கொண்டு செல்ல வேண்டியதில்லை, வீட்டுப்பாடமும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பள்ளி மாணவர்களின் ஸ்கூல் பேக்கை பார்த்தாலே பரிதாபமாக உள்ளது. பள்ளி மாணவர்கள் கொண்டு செல்லும் ஸ்கூல் பேக் அவர்களின் எடையை விட அதிகமாக இருப்பது போல சுமந்து செல்கின்றனர். இதனால் குழந்தைகளுக்கு உடல் சோர்வு ஏற்படுவதுடன், அவர்கள் கல்வி கற்கும் திறனும் பாதிக்கப்படுகிறது.

school bag

இந்தநிலையில் குஜராத் மாநிலத்தில் பள்ளிக்கல்வித் துறையை சீர்திருத்தும் வகையில் புதிய திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது தொடக்கக் கல்வி பயிலும் குழந்தைகள் பள்ளிகளுக்கு ஸ்கூல் பேக் கொண்டு செல்ல தேவையில்லை எனவும், அவர்கள் படிப்பதற்கு தேவையான உபகரணங்கள் பள்ளியிலேயே வழங்கப்படும் எனவும்,  அவர்களுக்கு வீட்டுப்பாடமம் கொடுக்காமல், அதற்கு பதிலாக கதை சொல்லுதல், பாடல், நடிப்பு போன்ற செயல்கள் கற்பிக்கப்படுகின்றன. இந்த இந்த திட்டத்தால் குழந்தைகளும், பெற்றோர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.