#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்னதான் பகை நாடா இருந்தாலும் உதவின்னு கேட்டா எங்களால செய்யாம இருக்க முடியாது.. சீன கப்பலுக்கு விரைந்த இந்திய கடலோர காவல் படை..!
இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு நீடிக்கின்ற போதிலும் அவ்வப்போது எல்லை பிரச்சினை காரணமாக சில பதற்றங்கள் நிலவுகின்றன. உலகிலே அதிக மக்கள் தொகை கொண்ட இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே எல்லை பிரச்சினை பல ஆண்டு காலமாக நீடித்து வருகிறது. இருப்பினும் இந்தியா அமைதியை விரும்புவதால் அனைத்தையும் பொறுமையாக கையாண்டு வருகிறது.
இந்நிலையில் மேற்கு கடலோர பகுதியில் சென்று கொண்டிருந்த MT Hua Wai சீன நாட்டு சரக்கு கப்பலை வழி நடத்திச் சென்ற மாலுமிக்கி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்திய கடலோர காவல் படைக்கு சீன நாட்டு கப்பலில் இருந்து மருத்துவ அவசர நிலைக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனையடுத்து இந்திய கடலோர காவல் படையினர் கப்பலில் நடுக்கடலுக்கு சென்று சீன சரக்கு கப்பலில் உடல்நிலை மோசமான நிலையில் இருந்த சீன மாலுமியை மீட்டு துறைமுகத்துக்கு அழைத்து வந்ததோடு மட்டுமல்லாமல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.