#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பட்டப்பகலில் துணிகரம்.. துப்பாக்கி முனையில் பெண் போலீஸ் அதிகாரியிடம் நகை பறிப்பு!
ஒடிஷா மாநிலம் புவனேஷ்வரில் வீட்டிற்கு முன் நின்று கொண்டிருந்த பெண் போலீஸ் அதிகாரியிடம் மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி நகைககளை பறித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புவனேஷ்வரில் லஞ்ச ஒழிப்பு துறையில் டிஎஸ்பியாக பணியாற்றுபவர் தனுஜா மொஹந்தி. இவர் நேற்று தனது வீட்டிற்கு முன்பு போனில் பேசியபடி நின்றுள்ளார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இருவர் அவரிடம் ஒரு முகவரியை பற்றி விசாரித்துள்ளனர்.
அதனை பற்றி தனக்கு தெரியாது என அவர் தெரிவித்துள்ளார். உடனே அந்த நபர்கள் போலீஸ் அதிகாரியின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து கழுத்து, காது மற்றும் கைகளில் அணிந்திருந்த தங்க நகைகளை பறித்துள்ளனர்.
தூரத்தில் நின்றுகொண்டிருந்த அவரது கணவர் காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் அருகில் வந்தால் உன் மனைவியை சுட்டுவிடுவோம் என அந்த மர்ம நபர்கள் மிரட்டியதால் அவர் அதே இடத்தில் நின்றுவிட்டார்.
அதன்பின்னர் அந்த மர்ம நபர்கள் தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து அவர்கள் அருகில் உள்ள கர்வேலா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.