#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கைக்குழந்தையை முதுகில் சுமந்தவாறு துப்புரவு பணி.. தாயின் நெகிழ்ச்சி செயல்., வைரல் வீடியோ..!
ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூரபஞ்ச் மாவட்டம், பரிபாடா நகராட்சியில் கடந்த 10 வருடமாக துப்புரவ்வு பணியில் ஈடுபட்டு வரும் பெண்மணி லட்சுமி. இவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த நிலையில், குடும்ப பிரச்சனையால் கணவரை பிரிந்து வசித்து வருகிறார்.
இதனால் குழந்தையை கவனிக்க வீட்டில் ஆட்கள் இல்லாத நிலையில், துப்புரவு பணியில் ஈடுபடும் போது தன்னுடன் குழந்தையை அழைத்து வந்து, முதுகில் குழந்தையை சுமந்தவாறு துப்புரவு பணிகளை மேற்கொள்கிறார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
#WATCH | Odisha: A lady sweeper, Laxmi cleans the road in Mayurbhanj district with her baby tied to her back. pic.twitter.com/g7rs3YMlFn
— ANI (@ANI) May 29, 2022
இதனைத்தொடர்ந்து, பரிபாடா நகராட்சியின் சேர்மன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "லட்சுமிக்கு குடும்ப பிரச்சனை இருக்கிறது. இதனால் அவர் தனது குழந்தையையும் பணியிடத்திற்கு அழைத்து வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சி அவருக்கு உதவியாக இருக்கிறது. அவருக்கு தேவையான உதவிகளை நாங்கள் செய்கிறோம். அவர்களுக்கு முழு உறுதுணையாக நகராட்சி நிர்வாகம் இருக்கும்" என்று தெரிவித்தார்.