பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
விநாயகர் சிலையை கரைக்கும் போது பவானி ஆற்றில் மூழ்கி ஒருவர் பலி : மற்றொருவர் தேடும் பணி தீவிரம்!
விநாயகர் சதுர்த்தி திருவிழா இந்தியா முழுவதும் மிகவும் விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது வழக்கம்.
முதன்முதல் கடவுள் கணேசனின் பிறந்தநாளை விநாயக சதுர்த்தியாக கொண்டாடி வருகிறோம். அதேபோன்று விநாயகர் சதுர்த்தி திருவிழா முடிந்து விநாயகர் சிலைகளை கடல் அல்லது ஆற்றில் கரைப்பது வழக்கம்.
ஒவொரு வருடமும் பகதர்கள் கவன குறைவால் எந்தேனும் அசம்பாவிதங்கள் நடப்பது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் அருகே கள்ளிப்பட்டி பவானி ஆற்றில் விநாயகர் சிலையை கரைத்த போது 3 பேர் நீரில் மூழ்கினர்.
நீரில் மூழ்கிய 3 பேரில் நித்திஷ் என்பவர் உயிருடன் மிக்கப்பட்ட நிலையில் தமிழரசன் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். பனியன் கம்பெனி தொழிலாளி சவுந்தரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மற்றைய இடங்களில் விநாயகர் சிலையை நீரில் கரைக்கும் பணியில் ஈடுபடும் பக்தர்கள் கவனமுடன் செயல்படுமாறு தமிழ் ஸ்பார்க் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.