#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பேக் ஐ.டி வைத்து பாக். ஐ.எஸ்.ஐ வலை.. ரகசியத்தை கசியவிட்ட விசாரணையில் பகீர் தகவல்கள்.!
அழகான பாக். இளம்பெண்கள் புகைப்படத்தை பயன்படுத்தி இந்திய இராணுவத்தினருக்கு காதல் வலைவிரித்து, இராணுவ தகவலை பெரும் பாக். ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பு குறித்து பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய இராணுவத்தின் நிலைகள் குறித்த தகவலை, எதிரிகளுக்கு கசியவிட்டதாக இராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்தவர் செப்டம்பர் மாதம் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் ஜிதேந்தர் ரத்தோர் என்று அடையாளம் காணப்பட்ட நிலையில், அவரிடம் இருந்து இராணுவ சீருடையும் மீட்கப்பட்டது. இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மர் கிராமத்தை சார்ந்த ஜிதேந்தர் ரத்தோர், பெங்களூரில் உள்ள கார்மெண்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இவர், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயுடன் தொடர்பு வந்திருந்த நிலையில், இராணுவத்தின் இருப்பிடம் மற்றும் தகவலை வாட்சப் மூலமாக அனுப்பி வைத்துள்ளார். முகநூலில் போலியான கணக்கில் அறிமுகமான பெண்ணுடன் பலமுறை பேசியதும் அம்பலமானது.
இளம்பெண்ணின் பெயர், புகைப்படத்தை பயன்படுத்தி ஐ.எஸ்.ஐ பாக் உளவு அமைப்பு ஜிதேந்தரை தொடர்பு கொண்ட நிலையில், அவரும் போலி அடையாளத்துடன் தோன்றிய பெண்ணின் மாய வலையில் சிக்கி இராணுவ தகவலை பரிமாறும் அளவு பழகி இருக்கிறார். அவரது அலைபேசி மற்றும் அவரிடம் கைப்பற்றப்பட்ட பொருட்களை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வந்தனர்.
அதன்படி, தற்போது ஜிதேந்தரின் அலைபேசியில் இருந்து 50 க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் புகைப்படம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள கராச்சியை சார்ந்த போலி பெண் கணக்கில் பாக். உளவுத்துறை இராணுவ ரீதியான புகைப்படத்தை அனுப்பியுள்ளதும் தெரியவந்துள்ளது.