#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடித்து கண்டித்த ஆசிரியர்.! மாணவனின் பெற்றோர்கள் செய்த காரியத்தால் பெரும் அதிர்ச்சி!!வைரலாகும் ஷாக் புகைப்படம்!
குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் ஆஷாதீப் என்ற தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு விபுல் கஜேரா என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அவரது வகுப்பில் படிக்கும் மாணவன் ஒருவன் கழிப்பறையில் கத்திக் கொண்டு ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக அவருக்கு வந்துள்ளது. இந்நிலையில் அவர் அந்த மாணவனை அழைத்து அவ்வாறு செய்யக்கூடாது என கண்டித்துள்ளார்.ஆனால் அந்த மாணவன் ஆசிரியர் பேச்சை கேட்காமல் பதிலுக்கு பதில் பேசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆத்திரமடைந்த ஆசிரியர் மாணவனின் கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து வீட்டிற்கு சென்ற மாணவன் இதுகுறித்து அவனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்து பள்ளிக்கு வந்த அந்த மாணவனின் பெற்றோர் மற்றும் அவர்களது உறவினர்கள் வகுப்புக்குள் நுழைந்து மாணவனை அடித்த ஆசிரியரை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து ஆசிரியர் தன்னை தாக்கிய மாணவன் மற்றும் அவனது பெற்றோர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் மாணவனின் குடும்பத்தாரும் ஆசிரியர் மீது புகார் அளித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆஷாதீப் பள்ளிக்கு ஆசிரியர்கள் வர மறுப்பதாக பள்ளி நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.