கொடுமையின் உச்சம்... மது கொடுத்து பாலியல் பலாத்காரம்... வாட்ஸ் அப்பில் பரப்பப்பட்ட வீடியோ... 2 பேர் கைது.!



peak-of-cruelty-rape-by-giving-alcohol-video-spread-on

பெண்ணிற்கு மது கொடுத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் அந்த வீடியோவை வாட்ஸ் அப்பில் பரப்பியதாக  அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கேரளாவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பினு மற்றும் உமேஷ் ஆகிய இருவரும் இளம் பெண் ஒருவரை தாங்கள் தங்கி இருந்த விடுதிக்கு அழைத்து அவருடன் மது அருந்தி உள்ளனர். பின்னர் மது போதையில் மயங்கிய பெண்ணை இருவரும் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோவாக எடுத்துள்ளனர்.

Indiaஅந்த வீடியோ காட்சிகளை வாட்ஸ் அப் சமூக வலைதளம் மூலமாக பரப்பியதாக தெரிகிறது. இது தொடர்பாக அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கேரள போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Indiaஇந்த சம்பவம் தொடர்பாக விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் உமேஷ் மற்றும் பினு என்ற இரண்டு பேரை கைது செய்து அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது சமூக வலைதளங்களின் மூலமாக அதிக தவறுகள் நடப்பது அதிர்ச்சி அளிக்க கூடியதாக இருக்கிறது.