#Breaking: புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து இடத்திலும் தமிழ் மொழி கட்டாயம் - முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு.!

புதுச்சேரி மாநிலத்தின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் தாக்கலுடன் தொடங்கிய கூட்டத்தொடரில், தற்போது கேள்வி நேரமும் நடைபெற்று வருகிறது.
அங்கு எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள், தங்களின் பல்வேறு கேள்விகளை அரசுக்கு எதிராக முன்வைத்து வருகின்றனர்.
மாநில அரசின் சார்பில் உரிய பதிலும் வழங்ப்படுகிறது. இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் செயல்பட்டு வரும் கடைகளில், அனைத்து இடத்திலும் பெயர்பலகைகள் தமிழ் மழையில் இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: திடீரென குறுக்கே பாய்ந்த மாடு.. காரில் மோதி இளைஞர் துள்ளத்துடிக்க பலி..!
தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொருட்டும், மும்மொழிக்கொள்கை யூனியன் பிரதேசத்தில் அமலில் இருந்தாலும், வணிக நிறுவனங்கள் உட்பட அனைத்து இடத்திலும் தமிழ் மொழி கட்டாயம் இடம்பெற வேண்டும்.
அரசு அழைப்பித்தலும் இனி வரும் நாட்களில் தமிழ் மொழியில் இடம்பெற வேண்டும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க: விஸ்வரூபம் எடுக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்; சீருடையில் சாலை மறியல்.!