பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
மருத்துவக்கல்லூரி மாணவி எலிமருந்து சாப்பிட்டு தற்கொலை.. கண்ணீரில் பெற்றோர்கள்.!
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில், நலத்துறை அதிகாரியாக பணியாற்றுபவர் கிருஷ்ணா ராவ் (வயது 59). இவரின் பூர்வீகம் ஆந்திர பிரதேசம் மாநிலம் ஆகும். கிருஷ்ணா ராவின் மனைவி வாணி ஸ்ரீ (வயது 49). தம்பதிகளுக்கு பிரவீன் என்ற 26 மகனும், மல்லா ரத்னா மவுலிகா என்ற மகளும் இருக்கின்றனர்.
இவர்களில், மவுலிகா புதுச்சேரி கனகசெட்டிகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவக்கல்லூரியில் விடுதியில் தங்கியிருந்து எம்.டி இறுதி வருடம் படித்து வருகிறார். கடந்த சில மாதமாகவே மவுலிகா மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரியவருகிறது.
இதற்காக கல்லூரியில் பணியாற்றும் மருத்துவரிடம் சிகிச்சையும் பெற்று வந்த நிலையில், கல்லூரி விடுதியில் இருந்த மவுலிகா திடீரென எலிமருந்தை தின்று தற்கொலை செய்துகொள்ள முயற்சித்து இருக்கிறார். இவரை மீட்ட சக மாணவிகள், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பெற்றோர் மேல் சிகிச்சைக்காக மகளை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ரத்னா மவுலிகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.