#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அதிர்ச்சி.. பிரபல ரௌடி கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்., பாஜக பிரமுகருக்கு தொடர்பு?..!
பிரபல ரவுடி பாண்டிச்சேரி பாம் ரவி கொலை வழக்கில், பாஜக பிரமுகருக்கு தொடர்பு இருப்பதாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வாணரப்பேட்டை பகுதியை சார்ந்தவர் ரவி (வயது 33). இவர் அப்பகுதியில் ரௌடியாக வலம்வந்த நிலையில், பாம் ரவி என்று பெயர் பெற்றுள்ளார். இவரின் மீது பல்வேறு கொலை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், ஜாமினில் வெளியே வந்த பாம் ரவி அக். 24 ஆம் தேதி நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார்.
தனது நண்பர் அந்தோணி என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வாணரப்பேட்டை பகுதியில் செல்லும் போதே, பட்டப்பகலில் இந்த சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் பாம் ரவி மற்றும் அவரது நண்பர் அந்தோணி படுகொலை செய்யப்பட்டனர். ரௌடி திப்லான் என்பவரின் கொலைக்கு பழிக்குப்பழியாக நடந்த இரட்டைக்கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விஷயம் தொடர்பாக முதலியார்பேட்டை காவல் ஆய்வாளர் சுரேஷ் பாபு தலைமையிலான காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், மற்றொரு கொலை வழக்கில் கைதாகி காலாப்பட்டு சிறையில் இருக்கும் வினோத், தீனு சதித்திட்டம் செய்து கூலிப்படை வைத்து பாம் ரவியை கொலை செய்தது தெரியவந்தது.
ஸ்கெட்ச் பாம் ரவிக்கு போடப்பட்ட நிலையில், சம்பவத்தின் போது அவருடன் பயணம் செய்த பாம் ரவியின் நண்பர் அந்தோணியும் கொலை செய்யப்பட்டார். சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த வினோத்தின் தாய் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வெடிகுண்டு கொடுத்து உதவிய லாஸ்பேட்டையை சார்ந்த 5 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய பிரவீன் மற்றும் அருண் ஆகிய 2 பேர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இந்த நிலையில், பாம் ரவியின் கொலை வழக்கில், வாணரப்பேட்டை பகுதியை சார்ந்த பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் சிக்கி இருப்பதாகவும், காவல் துறையினர் அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.