பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நிறைமாத கர்ப்பத்துடன் 500 கி.மீ நடைபயணம்.. மரத்தடியில் குழந்தையை பெற்றெடுத்த அவலம்!
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் நிறைமாத கர்ப்பத்துடன் தனது சொந்த ஊருக்கு நடந்தே சென்ற பெண் சாலையோரத்தில் மரத்தடியில் குழந்தை பெற்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப் பிரதேசம் லலித்பூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் மத்திய பிரதேசத்தில் உள்ள தாரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலைப்பார்த்து வந்துள்ளார். ஊரடங்கால் அவர்கள் பணியாற்றிய தொழிற்சாலை மூடப்பட்டது.
ஊரடங்கு மூன்றாம் முறை நீட்டிக்கப்பட்டதும் அந்த கர்ப்பிணி பெண் தன் கணவருடன் நடந்தே சொந்த ஊருக்கு புறப்பட்டார். அவர்களுடன் மேலும் ஒருசிலர் நடைபயணமாக வந்தனர்.
500 கி.மீ தொடர்ந்து நடந்து அவர்கள் உ.பி எல்லையான பாலபீட் கிராமத்தினை அடைந்ததும் சாலையோரத்தில் இருந்த மரத்தடியில் ஓய்வு எடுத்துள்ளனர். அப்போது 8 மாதம் கர்ப்பமாக இருந்த அந்த பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
அவர்களுடன் நடைபயணமாக வந்த மற்ற பெண்களின் உதவியுடன் அந்த பெண் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்த அந்த கிராமத்தின் தலைவர் அருகிலிருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவலளித்துள்ளார். பின்னர் அங்கு வந்த மருத்துவ குழுவினர் தாய் மற்றும் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்று தேவையான உதவிகளை செய்துள்ளனர்.