பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
துப்புரவு பணியாளர் மீது கல்லூரி பேருந்து மோதி பயங்கரம்; உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே பெண் பரிதாப பலி.. பதறவைக்கும் வீடியோ உள்ளே.!
வாகனங்களை இயக்கும்போது அலட்சியமாக இருந்தால் ஒன்று நமது உயிர் போகும், இல்லையேல் அப்பாவியின் உயிர் பலியாகும் என்பதே நிதர்சனம்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைத்ராபாத், ராம் கோடி பகுதியில் துப்புரவு பணியாளராக வேலை பார்ப்பவர் சுனிதா.
இவர் இன்று சாலையோரம் தனது வேலையை கவனித்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, அவ்வழியே தனியார் கல்லூரி பேருந்து வந்தது.
திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, வேலைபார்த்துக்கொண்டு இருந்த பெண்ணின் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில், பெண்மணி மரத்திற்கு முன்பு நின்று வேலை செய்துகொண்டு இருந்தார். இதனால் பேருந்து மோதிய வேகத்தில் பெண்ணின் உடல் நசுங்கி அவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், கல்லூரி பேருந்தில் பயணம் செய்த சில மாணவர்களும் காயம் அடைந்தனர். படியில் நின்று வந்த ஒருசில மாணவர்கள், வாகனத்தில் இருந்து வெளியே தூக்கியும் வீசப்பட்டனர்.
இந்த விபத்து குறித்த பதைபதைப்பு வீடியோ காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
అన్యాయంగా స్వీపర్ను గుద్దిన ప్రైవేట్ కాలేజ్ బస్సు.. చెట్టుకు మధ్యలో నలిగి మృతి
— Telugu Scribe (@TeluguScribe) August 28, 2023
హైదరాబాద్ - రామ్ కోటిలో రోడ్డు పక్కన చెత్త ఊడుస్తున్న జీహెచ్ఏంసీ స్వీపర్ సునీతను వేగంగా దూసుకొచ్చిన ఓ ప్రైవేట్ కాలేజ్ బస్సు ఢీకొట్టింది. ఈ ప్రమాదంలో ఆమె బస్సు, చెట్టుకు మధ్యలో నలిగిపోయి అక్కడికక్కడే… pic.twitter.com/1icvK8zjtz