#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அயோத்தி வழக்கின் தீர்ப்பு! 4 ஆயிரம் துணை ராணுவத்தினர் குவிப்பு!
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இதையொட்டி, அங்கு 4 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் ராமஜென்மபூமி, பாபர் மசூதி அமைந்திருந்ததாக கூறப்படுகிற சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தமானது என்பதில் இன்னும் இறுதி முடிவு வரவில்லை.
இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 9 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மேல்முறையீட்டு வழக்குகளில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 பேரை கொண்ட அரசியல் சாசன அமர்வு தொடர்ந்து 40 நாள் விசாரணை நடத்தியுள்ளது.
இந்த வழக்குகளின் விசாரணை கடந்த மாதம் 16-ந் தேதி முடிந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இந்த மாதம் 17-ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். எனவே அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பாக அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது.
இந்த தீர்ப்பினைத் தொடர்ந்து அசம்பாவிதங்கள் எதுவும் நாடாமல் பார்த்துக்கொள்வதில் மத்திய அரசு முனைப்பாக செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அயோத்திக்கு பாதுகாப்பு பணிக்காக 4000 துணை ராணுவ வீரர்களை மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது.
மேலும் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், பதற்றமான எல்லா இடங்களிலும் போதுமான பாதுகாப்பு படையினரை அமர்த்தி, அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.