பேஸ்புக்கிற்கு அடிமையான மனைவி - கடைசியில் பெற்ற குழந்தைக்கு அப்பா செய்த கொடூரம்!



Raju Murder his wife and son

பெங்களூர் கங்கொண்டனஹள்ளி பகுதியை சோர்ந்தவர்கள் ராஜு மற்றும் சுஷ்மா தம்பதியினர். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை இருந்துள்ளது. மூவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளனர்.

அப்போது ஒரு நாள் சுஷ்மாவின் தாய் தனது மகள் மற்றும் பேர குழந்தையை காண வந்துள்ளார். அப்போது அவருக்கு உண்மை தெரிந்துள்ளது தனது மகள் மற்றும் பேர குழந்தையை காணாமல் போயுள்ளனர்.உடனே அவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

Raju

புகாரின் அடிப்படையில் முதலில் சுஷ்மாவின் கணவரான ராஜுடம் விசாரணை மே‌ற்கொ‌ண்டனர். அப்போது தான் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியானது. அதாவது தனது மனைவி கொஞ்ச நாட்களாகவே பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றிக்கு அடிமையாகி வீட்டு வேளைகளை செய்யாமல் இருந்துள்ளார்.

இதனால் கோபமான ராஜு தனது மனைவி மற்றும் குழந்தையை கும்பல்கொடு காட்டிற்கு அழைத்து சென்று தனது மனைவியை கல்லால் அடித்து கொலை செய்து விட்டு பின் எரித்து விட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் தனது குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று விட்டதாகவும் கூறியுள்ளார். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.