"கவலைய விடுங்க; நாங்க இருக்கோம்"- வீரர்களின் குடும்பங்களுக்கு ரிலையன்ஸ் அதிரடி அறிவிப்பு



Reliance foundation offers for jawans family

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபோராவில் பயங்கராவாதிகள் நடத்திய தற்கொலைப்படை கார் குண்டு தாக்குதலில் பாதுகாப்பு படை வீர ர்கள் 40 பேர் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து பயங்கரவாத தாக்குதலுக்கு அரசு உரிய பதிலடி கொடுக்க வேண்டுமென மக்கள் ஒருமித்த குரல் எழுப்பிய வண்ணம் உள்ளனர். மேலும் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலதிட்ட உதவிகளை அறிவித்துள்ளன. 

Kashmir attack

இந்நிலையில் முதன்மை தொழில் குழுமமான ரிலையன்ஸ் பவுண்டேஷன், “உயிர் இழந்த தியாகிகளுக்கு நன்றியுணர்வுடன், அவர்களது குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் அவர்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கான பொறுப்பை ரிலையன்ஸ் ஃபண்டேஷன் ஏற்கும். தேவைப்பட்டால் தாக்குதலில் பாதிப்படைந்துள்ள இராணுவ வீரர்களுக்குத் தேவையான சிகிச்சையையும் ரிலையன்ஸ் மருத்துவமனைகள் ஏற்கும். நமது அன்பிற்குரிய இராணுவ வீரர்களுக்கு கைகொடுக்க அரசுடன் இணைந்த செயல்பட நாங்கள் தயாராக உள்ளோம்" என்று எரு அறிக்கையினை வெளியியட்டுள்ளது.