மேற்கு வங்க மாநில ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவில் கலவரம்... பதற வைக்கும் வீடியோ காட்சிகள்.!



riot-in-west-bengal-state-rural-local-body-election-bal

மேற்குவங்க மாநிலத்தில் கடும் பாதுகாப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஊராக உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு நாளான இன்று கூச் பீகார் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

மேற்குவங்க மாநிலத்தில்  ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான நாளிலிருந்து கலவரங்களும் மோதல்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கு மத்தியில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு துவங்கியது. 5 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ள இந்த தேர்தலில் 65,000 துணை ராணுவப் படையினரும், மாநில காவல்துறை சார்பில் 70 ஆயிரம் காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

India

இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலின் மூலம்  63,229 கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள், 9,730 பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் 928 மாவட்ட உறுப்பினர் பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட  இருக்கின்றனர். கலவர மற்றும் மோதல்களுக்கான அபாயம் இருந்தாலும் காலை முதலே வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்கு செலுத்தி வருகின்றனர்.

பெரும்பாலான இடங்களில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றாலும் கூச் பிஹார்  பகுதியில் அமைந்துள்ள ஆரம்பப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்குள் புகுந்த மர்ம நபர்கள் வாக்குச்சீட்டுகளை தீ வைத்து கொளுத்தியதோடு அந்த வாக்குச்சாவடியையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார். அங்கிருந்த நாற்காலிகள் மேஜை உள்ளிட்டவற்றையும் உடைத்தனர். இதனால் அந்த பகுதியே கலவர பூமியாக காட்சி அளித்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.