#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கார் மீது லாரி மோதி விபத்து...ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி... 3 பேர் படுகாயம்... போலீசார் விசாரணை...
மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் உள்ள குவாலியர் பகுதியில் நோயுற்ற உறவினர் ஒருவரை பார்த்து விட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் காரில் தங்களது சொந்த ஊரான பித்தோலி கிராமத்திற்கு திரும்பியுள்ளனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக காரின் பின்னால் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியுள்ளது.
அதில் காரில் பயணம் செய்த 8 பேரில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மற்ற 4 பேர் மட்டும் மீட்கப்பட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஒருவர் மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி ஓட்டுனரையும் போலீசார் தேடி வருகின்றனர்.