பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நள்ளிரவில் மதுபோதை., வீடுபுதுந்து ரவுடியை வெட்டிசாய்த்த மர்மக்கும்பல்..! துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்..!!
பிரபல ரவுடியாக வலம் வந்தவரை, வீடுபுகுந்து மர்மகும்பல் வெட்டி சாய்த்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மேட்டுப்பாளையம் சண்முகாபுரம் வடக்கு பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 24). இவர் பிரபல ரவுடியாக வலம் வந்த நிலையில், பல வழக்குகளில் தேடப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு நேரத்தில் சக்தி என்ற 20 வயது நண்பருடன் வீட்டில் மதுஅருந்தி கொண்டிருந்த பன்னீர்செல்வத்தை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மகும்பல் சரமாரியாக வெட்டி சாய்த்தது. இதில் இருவரும் தப்பிச்செல்ல முயற்சி செய்த்தனர்.
ஆனால், அவர்களை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், பன்னீர்செல்வம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பன்னீர் செல்வத்தின் மீது பல வழக்குகள் இருப்பதால் முன்விரோதம் காரணமாக இக்கொலை நடந்திருக்கலாம் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.