#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஊரடங்கால், உணவின்றி தவிப்பவர்களுக்காக சச்சின் செய்த அசத்தலான காரியத்தை பார்த்தீர்களா! குவியும் வாழ்த்துக்கள்!
சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 190க்கும் மேற்பட்ட உலகநாடுகளில் அசுரவேகத்தில் பரவி கோரத்தாண்டவமாடி வருகிறது. இத்தகைய கொடிய கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 7447 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் 236பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால் பல கூலிதொழிலாளர்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பெருமளவில் அவதிப்பட்டு வருகின்றனர்.மேலும் பலர் ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.மேலும் பலரும் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவுங்கள் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் நிதியுதவிகளை அளித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் பிரதமர் மற்றும் மகாராஷ்டிர முதல்வர் நிவாரண நிதிக்கு தலா 25 லட்சம் நிதிஅளித்துள்ளார்.
அதனை தொடர்ந்து தற்போது மும்பையில் சிவாஜி நகர் மற்றும் கவுந்தி பகுதியில் வசித்து வரும் 5000 ஏழை மக்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய ரேஷன் பொருள்களை வழங்கியுள்ளார். இதுகுறித்து தொண்டு நிறுவனமான அப்னாலயா அமைப்பு தனது சமூக வலைதளபக்கத்தில் தெரிவித்து வாழ்த்தியுள்ளது.
My best wishes to @ApnalayaTweets to continue your work in the service of the distressed and needy. Keep up your good work.🙏🏻 https://t.co/1ZPVLK7fFb
— Sachin Tendulkar (@sachin_rt) April 9, 2020