பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!
நீங்கள் பள்ளிக்கு தேவை இல்லை.! சாலையில் இட்லி கடை நடத்தி பள்ளி தலைமை ஆசிரியர்..! 22 ஆயிரம் வாங்கியவர் 200 க்கு சிரமப்படும் நிலை..!
கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இழந்த தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் சாலையில் இட்லி கடை நடத்தும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா காரணமாக பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் முதல் தற்போதுவரை ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுவருகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் வேலை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து சாப்பாட்டிற்கே சிரமப்படும் சூழல் உருவாகியுள்ளது.
குறிப்பாக தனியார் பள்ளியில் வேலை பார்த்துவந்த ஆசிரியர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் இவர்கள் வேலை இல்லாமல் சிரமப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் தெலுங்கானாவில் உள்ள கம்மம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர் வேலை இல்லாததால் சாலையில் இட்லி கடை ஒன்றை நடத்திவருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஊரடங்கு என்பதால் தற்போது பள்ளிக்கு தலைமை ஆசிரியர் தேவை இல்லை என கூறிவிட்டதால் எனது வருமானம் முற்றிலும் நின்றுவிட்டது. எனது வருமானத்தை நம்பியே குடும்பம் இருந்துவந்த நிலையில் வேலை இழந்ததால் வேறு வழியில்லாமல் இந்த முடிவுக்கு வந்ததாக அவர் கூறியுள்ளார்.
முன்பு மாதம் 22 ஆயிரம் வரை சம்பளம் வாங்கியதாகவும், தற்போது தினமும் 200 க்கே மிகவும் சிரமப்படுவதாகவும் அந்த தலைமை ஆசிரியர் கூறியுள்ளார்.