வீட்டுக்குள்ள அடிதடி, வெளிய கொண்டாட்ட கும்மியடி.. இது பிக் பாஸ் தோழர்கள் சங்கம்.! வைரல் வீடியோ இதோ.!
பரபரப்பு சம்பவம்..! அரசு மருத்துவமனைகுள் நுழைந்து பச்சிளம் குழந்தையை தூக்கி சென்று கடித்து குதறிய நாய்... பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!
ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தில் வசித்து வருபவர் மகேந்திர மீனா - ரேகா தம்பதியினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மகேந்திர மீனா உடல் நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் அவரது மனைவி ரேகா மற்றும் ஒரு மாத கைக்குழந்தை உட்பட 3 குழந்தைகளுடன் மருத்துவமனையில் தங்கி இருந்து தனது கணவரை கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனையில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது தெரு நாய்கள் இரண்டு அவர்கள் இருக்கும் வார்டில் நுழைந்து உள்ளே வந்துள்ளது. அவ்வாறு நுழைந்த ஒரு நாய் தாய் ரேகா அருகில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியே சென்று கடித்துக் குதறியது. இதில் அந்தப் பச்சிளம் குழந்தை துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது.
மேலும் இந்த சம்பவமானது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான நிலையில் போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் போலீசார் மற்றும் மருத்துவர்கள் ரேகாவிடம் வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கிவிட்டு தங்களுக்கு தெரியாமல் குழந்தை உடலை தகனம் செய்து விட்டதாக குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் மருத்துவமனைக்குள் நுழைந்து தாயின் அருகில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை நாய் தூக்கி சென்று கடித்துக் குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.