#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அதிர்ச்சி..கேட்பாரற்று சாலையோரம் கிடந்த சூட்கேஸில் இளம்பெண் சடலம்.. போலிஸார் தீவிர விசாரணை.!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை குர்லா அடுத்த சாந்தி நகர் பகுதியில் சாலையோரமாக சூட்கேஸ் ஒன்று நீண்ட நேராக கேட்பாரற்று கிடந்துள்ளது. இதனை அந்த வழியில் சென்ற பலரும் கவனித்துள்ளனர்.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் மும்பை காவல் துறையினருக்கு சாலையோரம் கிடக்கும் சூட்கேஸ் பற்றிய தகவலை தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் அந்த சூட்கேஸை திறந்து பார்த்ததில் அதில் ஒரு இளம்பெண் சடலம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனையடுத்து அந்த பெண்ணின் சடலத்தை மீட்ட காவல் துறையினர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மும்பை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.