பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அச்சோ.. அணைக்கட்டு சுவரில் தனியாக நடந்து செல்லும் குழந்தை! ஒவ்வொரு நொடியும் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் ஷாக் வீடியோ!!
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் குழந்தைகளின் சேட்டைகள் மற்றும் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது குழந்தை ஒன்று அணைக்கட்டு சுவரின் மீது தனியாக நடக்கும் பதைபதைக்க வைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதாவது குட்டி குழந்தை ஒன்று அணைக்கட்டு சுவரில், வரிசையாக இருக்கும் கம்பிகளை பிடித்தவாறு நடந்து செல்கிறான். மிகச்சிறிய சுவரான அதில் கொஞ்சம் தவறினாலும் சுமார் 100 அடிக்கு கீழ் இருக்கும் அணைக்குள் குழந்தை விழ நேரிடலாம். மேலும் அதில் தனியாக நடக்கும் அந்த சிறுவன் சில இடங்களில் கீழே விழுந்து விடுமாறு தடுமாறியும் செல்கிறான்.
ஆனால் உஷாராகி பின் மெதுவாக சுவரில் நடந்து வருகிறான். அணையில் இருந்து தண்ணீர் வேகமாக ஊற்றி கொண்டிருக்கும் நிலையில், சின்ன சுவரில் குழந்தை தனியாக நடந்து செல்லும் நெஞ்சை உலுக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலான நிலையில் பலரும் குழந்தையை தூக்காமல் வீடியோ எடுத்த அந்த நபரை வசைபாடி வருகின்றனர்.
Me dio algo. 😳 pic.twitter.com/jkGRwWf1FJ
— Mi Video Viral (@mivideoviral) February 8, 2022